ஒரு சைக்கோவின் டைரியை புரட்டி பார்த்த அனுபவத்தை தந்திருக்கிறார் கௌதம் மேனன். படத்தின் வசனங்களில் மணிரத்னம் போல் சிக்கனம் தெரிகிறது.
சைக்கோக்கள் பத்து வயதிற்கு முன்பாகவே உருவாகிறார்கள் (சமுதாயத்தால் உருவாக்கப்படுகிறார்கள்) என்று அழகாய் உணர்த்தும் கதை. அவர்கள் தனிப்பட்டு தெரிவதில்லை. நம்மைப் போல் இயல்பாக வாழ்கிறார்கள், பழகுகிறார்கள், அவர்களுக்கான இரை கிடைக்கும் வரை............கிடைக்கும் போது அவர்களுக்குள் உறங்கும் சைக்கோ வில்லன் விழித்து கொள்கிறான்.
இன்டர்நெட்டில் மூழ்கி தோழமையில் முத்தெடுக்க விரும்பும் பலருக்கு (குறிப்பாக பெண்கள்)அதில் உயிர் குடிக்கும் சுறாக்களும் இருக்கலாம் என்று அழுத்தமாய் சொல்லும் அலாரமணி - நடுநிசி நாய்கள். அழகான காதலியோடு தனியாய் செல்லும் ஆண்களும் கவனம் தேவை..ஆபத்து உங்கள் காதலி வடிவிலும் வரலாம்.
நடுநிசி நாய்கள்- இரத்த வாடை தேடி உங்களுக்கு அருகிலும் வசிக்கலாம் - ஜாக்கிரதை
No comments:
Post a Comment