Total Pageviews

Wednesday, June 8, 2011

மீசை ............


என் இரு வரி குறளை(இதழை)
தீட்டிட துடிக்கும் எழுதுகோல்(குழல்)

விழி மொழிகள்



தினமும் சந்திக்கிறோம்.........
நாகரிகமாய் உன் புன்னகை
மௌனமாய் என் வெட்கம்
பண்டமாற்று முறையில் இருவரும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்
நம் காதலை............

பசலை



உன் கரங்களுக்குள் சிறைபடுவதற்காகவே
மெலிகிறது என் இடை............

காதல் சாம்ராஜ்யம்



பல கவிஞர்களை தாடியோடு பிரசவித்து
கண்ணீரை பரிசளித்து
தூரமாய் நின்று புன்னகைக்கிறது காதல்......
தோற்றவன் கூட போற்றும் இந்த காதலை
யார் தான் ஒழிப்பது??????

Tuesday, May 31, 2011

அலைபாயும் பேதை..........

வெகுதூரம் நீ எனை
கடந்து சென்றாலும் உன் மீதான காதல் மட்டும்
கரையாமல் என்னை கொல்லுவதேன்??????

Beautiful girl painting background

நீ இல்லாத உலகம் - நரகம்
நீ பேசாத மணித்துளிகள் - வெறுமை
நீ இல்லாத நான் பிணம்

Thursday, May 12, 2011

உன்னோடான உறவு...............


உன் பாததடங்களில் முதன் முதலாய் தொடங்கியது
என் மழலை நடை...............

நினைத்து பார்க்கிறேன்
நிலா உறங்கும் வரை நீண்ட நம் உரையாடல்கள்


இரவு நேர தனிமையில் இளையராஜா இசையை உன் குரலால் கொல்லும் கொடுமை (இன்னும் என் காதுகள் வலிக்கின்றன...........)
தவறிழைக்கும் போது எனை எரிக்கும் உன் பார்வை.........
பின் மழலை போல் என் மடியில் உன் உறக்கம்


சின்ன சின்ன ஊடல்கள்
எனை சீண்டி சிரிக்கும் உன் சிற்றின்பம்
என் கோபத்தை மறைந்திருந்து நீ ரசிக்கும் அழகு...........



உன்னுடனான ஒவ்வொரு நிமிடமும் அழகிய கவிதை
தனிமை தருணங்களில் என் விழியோர கண்ணீர் காதுகளுக்குள் சொல்லி சென்றது
Really I miss u ANNA..................

நினைவுகளுடன்
உங்கள் கருவாச்சி................

Monday, April 25, 2011

தன்னம்பிக்கை



எத்தனை துன்பங்கள் வந்தாலும் எனக்கு

கவலை இல்லை ..........

ஏன் என்றால்........

நான் நூறு முறை ஜெயித்தவள்

அல்ல...

ஆயிரம் முறை தோற்றவள்............


Saturday, March 26, 2011

மனதிலே உள்ளுறும் உணர்வுகள்............

(My Favorite Song)

உன் உள்ளம் நான் காண என் ஆயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது
ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது.


கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீ தானே ................


நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான் தானே....................



என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணின் அசைவிலே.....................


Friday, March 25, 2011

நடுநிசி நாய்கள்

ஒரு சைக்கோவின் டைரியை புரட்டி பார்த்த அனுபவத்தை தந்திருக்கிறார் கௌதம் மேனன். படத்தின் வசனங்களில் மணிரத்னம் போல் சிக்கனம் தெரிகிறது.

சைக்கோக்கள் பத்து வயதிற்கு முன்பாகவே உருவாகிறார்கள் (சமுதாயத்தால் உருவாக்கப்படுகிறார்கள்) என்று அழகாய் உணர்த்தும் கதை. அவர்கள் தனிப்பட்டு தெரிவதில்லை. நம்மைப் போல் இயல்பாக வாழ்கிறார்கள், பழகுகிறார்கள், அவர்களுக்கான இரை கிடைக்கும் வரை............கிடைக்கும் போது அவர்களுக்குள் உறங்கும் சைக்கோ வில்லன் விழித்து கொள்கிறான்.

இன்டர்நெட்டில் மூழ்கி தோழமையில் முத்தெடுக்க விரும்பும் பலருக்கு (குறிப்பாக பெண்கள்)அதில் உயிர் குடிக்கும் சுறாக்களும் இருக்கலாம் என்று அழுத்தமாய் சொல்லும் அலாரமணி - நடுநிசி நாய்கள். அழகான காதலியோடு தனியாய் செல்லும் ஆண்களும் கவனம் தேவை..ஆபத்து உங்கள் காதலி வடிவிலும் வரலாம்.

நடுநிசி நாய்கள்- இரத்த வாடை தேடி உங்களுக்கு அருகிலும் வசிக்கலாம் - ஜாக்கிரதை






Tuesday, March 22, 2011

உயிரே..........பிரியாதே............


நிழல் நம்பிடும் என் தனிமை
உடல் நம்பிடும் உன் பிரிவை
உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே...................





Monday, March 7, 2011

அம்மா


தொப்புள்கொடி அறுபட்ட பிறகு தான் இறுக்கமாய் பிணைக்கப்பட்டது
நம் உறவு............


தோள் கொடுப்பான் தோழன்
தாங்கி நிற்பார் தந்தை
உதவிகள் செய்வர் உற்றார்
உயிர் கொடுப்பது உன்னால் மட்டும் தானே முடியும்.


சிரித்து மகிழ
என்னை சுற்றி ஆயிரம் உறவுகள் நண்பர்கள்
ஆனால் என் கண்ணீற்கு வடிகால்
உன் பாசக் கரங்கள் மட்டுமே................
ஆம்........சோகத்தில் மட்டும் எனக்கு நான்கு கண்கள் அழுவதற்கு
உன் விழிகளையும் சேர்த்து.............


உன் கைகளால் சாப்பிடும் போதெலாம்
தவழும் குழந்தையாகி போகிறேன்


இருப்பவர்கள் உணர்வதில்லை
இழந்தவர்கள் மறப்பதில்லை
தாய்மையின் பெருமையை...........


என் தாய்
சேலை சூடிய நிலவு
பேசும் நந்தவனம்
புன்னகையின் தேவதை
பொறுமையில் கோமாதா
மொத்தத்தில்
தெய்வத்தின் பிரதிபிம்பம்.......

போற்றுவோம் தாய்மையை
மகளிர் தின வாழ்த்துகள்.........

நெஞ்சு பொறுக்குதிலையே...............

நாட்டை விற்கும் கூட்டுக் களவாணிகள்!

இந்திய ஊழல் தொகையின் பதினேழாண்டு மதிப்பு 73 இலட்சம் கோடி ரூபாய்கள்!


ஸ்பெயின் தேசத்துக் காளைகளை வீரர்கள் அடக்குவதை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம்; கட்டுக்கடங்காத கோபத்தோடு அந்தக் காளை பாயும். ஆனால் எதைப் பார்த்து? அதில் தான் இருக்கிறது அந்த வீரத்தின் சூட்சுமம். காளையை அடக்கும் வீரன் கையில் ஒரு வண்ணத் துணியைப் பிடித்து அதன் முன் ஆட்டிக் கொண்டிருப்பான். அதை ஏதோ விரோதமான ஒன்று என நினைத்து ஏமாறும் காளை அதன் மேல் பாயும். இப்படி தொடர்ந்து பாய்ச்சல் காட்டிக் காட்டி தனது சக்தியை எல்லாம் இழந்த ஒரு தருணத்தில் அந்த வீரன் தன் கையில் இருக்கும் கத்தியை காளையின் மேல் பாய்ச்சுவான். இது அக்காளையைப் பொருத்தவரையில் ஒரு கண் கட்டி வித்தைதான். அதன் கண்களைக் கட்டி ஏமாற்றி அதனை வெல்கிறான் அந்த வீரன்.

இப்போது இந்திய தேசத்தை அந்தக் காளையாக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பாய்ச்சலை இந்தத் தேசத்து மக்களின் ஆத்திரம் என்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த வண்ணத் துணி தான் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா. அவரைப் பிடித்து ஆட்டும் கைகள் தான் மன்மோகன் சிங். அந்தக் கைகளை இயக்கும் மூளை தான் பன்னாட்டு நிறுவனங்களும் உலக வங்கியும். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் களம் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல்.


இன்னும் கொஞ்சம் எளிமைப்படுத்த வேண்டுமானால், ஒரு மாபெரும் பந்தி நடந்து முடிந்துள்ளது அதில் பரிமாறப்பட்டது நமது நாட்டின் முக்கியமான ஒரு இயற்கை வளம். பந்தியை நடத்தியது மன்மோகன் தலைமையிலான ஆளும் வர்க்கமும் பா.ஜ.க,காங்கிரசு,திமுக உள்ளிட்ட ஆளும் வர்க்கக் கட்சிகளும் தின்று ஏப்பம் விட்டது பன்னாட்டுக் கம்பெனிகள் முதல் உள்நாட்டுத் தரகு முதலாளிகள் வர்க்கம் வரை பந்தி பரிமாறியது ஆ.இராசா. இப்போது விவகாரம் வெளியானவுடன் பரிமாறியவனை மட்டும் பலி கொடுத்து விட்டு மற்றவர்கள் எஸ்கேப்பாகப் பார்க்கிறார்கள்.


ஊடகங்களைப் பொறுத்த வரையில், கதையில் ஒரு வில்லன் வேண்டும்; அவன் தோற்க வேண்டும். கடந்த பல பத்தாண்டுகளாக இந்தியாவில் நடந்து வரும் இந்த ஊழல் மெகா சீரியலின் இப்போதைய எபிசோடில் வில்லன் ஆ.இராசா. அவர் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததன் மூலம் தோற்று விட்டார். இதை இன்னும் ஒரு பத்து நாட்களுக்கு கொண்டாடுவார்கள். பின்னர் அனைத்தும் மறக்கப்படும்; மறக்கடிக்கப்படும். அடுத்து இன்னும் சில மாதங்களில் வேறு ஏதாவது இரண்டு லட்சம் கோடி ஊழல் ஒன்று வெளிப்படும் நாளில் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்த என்ன உத்தியைக் கடைபிடிக்கலாம் என்று விவாதிப்பதில் அவர்கள் பிஸியாகி விடுவார்கள். இதற்கிடையே அந்த 1.76 லட்சம் கோடிகளின் கதி? அது வழக்கம் போல என்றென்றைக்கும் திரும்பி வரவே போவதில்லை.

மேலே உள்ள அந்த எழுபத்தி மூன்று லட்சம் கோடிகளும் திரும்ப தேசத்திற்குக் கிடைத்து விட்டதாகவோ அல்லது அதில் இருந்து ஒரு குண்டூசி முனை அளவுக்காவது திரும்பி வந்தது என்பது போன்ற தகவல்களோ இல்லவே இல்லை.

முன்பு வி.எஸ்.என்.எல் நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு டாடாவுக்கு தாரை வார்த்துக் கொடுத்த போது என்ன விளைவு ஏற்பட்டதோ, லாபத்தில் இயங்கிய மாடர்ன் பிரட்டை யுனிலீவருக்கு சல்லிசாக அள்ளிக் கொடுத்த போது என்ன விளைவு ஏற்பட்டதோ, அரசுத் துறை அலுமினிய உற்பத்தி நிறுவனமான பால்கோவின் பங்குகளை குறைவாக மதிப்பிட்டு ஸ்டெர்லைட்டுக்கு விற்று நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்திய போது என்ன விளைவுகள் ஏற்பட்டதோ, நல்ல லாபத்தில் இயங்கி வந்த இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் நிறுவனத்தின் மதிப்பைக் குறைத்து விற்று நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்திய போது என்ன விளைவுகள் ஏற்பட்டதோ அதே போன்ற விளைவு தான் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டிற்கும் ஏற்படும்.

அது என்னவென்று கேட்கிறீர்களா? மௌனம். ஆழ்ந்த மௌனம். வெட்கம் கெட்ட மௌனம். கேடு கெட்ட மௌனம். வேறெந்த விளைவும் ஏற்படப் போவதில்லை. ஊடகங்களின் இப்போதைய ஆர்வமெல்லாம் அந்த ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் என்ற பெரிய எண்ணிக்கை ஏற்படுத்தும் அதிர்ச்சி மதிப்பீட்டில் இருந்து நேயர்களிடையே எத்தனைக்கு எத்தனை அறுவடை செய்ய முடியும் என்பதில் தான்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இங்கே ஒரு வைசிராய் இருந்தார் அவருக்கு பொன்னிற முடியும் வெள்ளைத் தோலும் இருந்தது. இப்போது இருக்கும் வைசிராய்களுக்கு அந்த அடையாளங்கள் இல்லை. அந்த ஒரு வித்தியாசத்தைத் தவிர்த்து வேறெந்த வித்தியாசமும் இல்லை. இதைத் தான் மறைமுக காலனியாதிக்கம் மறுகாலனியாதிக்கம் என்கிறோம்.

வல்லரசு நாடுகளுக்கு இந்தியாவை கூறு போட்டு விற்கும் இந்த அரசமைப்பைக்கும் அதன் அடியாட் படைக்கும் எதிராக நாட்டு மக்கள் தொடுக்கும் போராட்டம் மட்டுமே ஸ்பெக்ட்ரம் ஊழல் பெருச்சாளிகளை தண்டிக்கும். அந்த களப்பணியில் இணைவது மட்டுமே இந்த ஊழலுக்கு நாம் காட்டும் உண்மையான எதிர்ப்பாக இருக்க முடியும்.


வாழ்க எழில்மிகு பாரதம்!!!!!!!!