Total Pageviews

Saturday, December 11, 2010

ரசித்தவை..................


உறவு வைரம் போன்றது.........

அதைக்கொண்டே அதை

அறுத்துக்கொள்ளும் தன்மை அதற்கு!!!!!!!!!!!

Tuesday, December 7, 2010

விழிகள்


உன் உருவங்கள் மட்டுமே
பதிக்கப்பட்ட கார்பன் தாள்கள்
என் கண்கள்..............

Tuesday, November 30, 2010

loooooooooooooooooove you daddy...................



என் கருவறை விடுதலைக்கு பின்
நான் கரம் பற்றிய முதல் தோழன்...........


"முதன்முதலில் உன் அப்பா தூக்கியதற்கு பிறகு தான் நீ அழவே ஆரம்பித்தாய்"
இன்று வரை சொல்லி சிரிப்பாள் என் தாய் ................
நான் அழும் போது முதன் முதலாய் சிரித்தவரும் அவரே.....
அழுகை வரும் போது சிரிக்க கற்று கொடுத்தவரும் அவரே.!!!!!!!!!



என் முதன் முதல் வெற்றியில்
அவரின் புன்னகைக்கு முன் சிறிதாய் போனது
நான் பெற்ற பரிசு...........


என் தொலை தூர பயணங்களில் பல நேரம் தனிமையை உணர்ந்திருக்கிறேன்
ஆனால் இவ்வளவு நாள்
என் தந்தையின் தோள்களில் தான் பயணித்திருக்கிறேன் என்று இப்போது உணர்கிறேன்.



பத்து மாதம் சுமந்திருகிறாள் தாய்
கடமைபட்டிருக்கிறேன்.
ஆயுள் வரை எனை சுமக்கும் தாயாய் என் தந்தை
கடன்பட்டிருக்கிறேன் .
ஈடு செய்ய இயலா கடன்...........



"விண்வெளி ஆராய்ச்சிக்கூடத்தில் ஒருநாள் என் தந்தையோடு தங்க வேண்டும்" என்று
நான் கேட்ட வரத்தில் இன்றும் என்னை மிரட்சியாய் பார்க்கிறார்
எங்கள் ஊர் கருப்பர்(தெய்வம்)............................



என்னோடிருக்கும் அனைவரும் "என்னை அப்பா பைத்தியம்" என்பர்.
உங்கள் நினைவுகளில் எத்தனை முறை பைத்தியமாகவும் நான் தயார்.



கனவுகள் கவிதைகள் உணர்வுகள் உறவுகள் எல்லாம் தாண்டிய ஓர் உலகம்
என் அப்பா...................
அத்தனை விழுதுகளையும் ஆசையாய் சுமந்து நிற்கும் ஆலமரவேர்......




ஆசைபடுகிறேன்.......................
இறுதிவரை உங்கள் கருவிழிக்குள் குடியிருக்கும்
குழந்தையாய் இருக்க...........


எல்லா மொழிகளும் தோற்று விட்டன .......
உங்களுக்கு நிகராய் ஒற்றை வார்த்தை எனக்கு தர முடியாமல்
என்னால் சொல்ல முடிந்தது இது மட்டுமே........................
I loooooooooooooooooove you daddy...............


by
Saranya Arumugam

Monday, November 1, 2010

விருப்பத்துடன் சகித்து கொள்ளுங்கள்


எதையும் நாடி செல்லாதே....................

எதையும் தவிர்க்காதே..............................

வருவதை ஏற்று கொள்

எதனாலும் பாதிக்கபடாமலிருப்பது ஒரு பெறும் சுதந்திரமாகும்.



வெறுமனே சகித்துக் கொண்டிராதே…… பற்றற்றிரு!!!!!!!!!!!!

இன்பம் வரும்………. நல்லது தான்….. யார் தடுக்கிறார்கள்?

துன்பம் வரும்……. அதனையும் வரவேற்போம்............. .

எருதின் கதையை நினைவிற் கொள்ளுங்கள்.



ஓர் எருதினுடைய கொம்பின் மீது ஒரு கொசுவானது நீண்ட

நேரம் உட்கார்ந்திருந்தது.சிறிது நேரம் கழித்து அந்தக் கொசுவுக்கு மனசாட்சி

உறுத்தவே அது அய்யா எருதாரே!” நான் நெடு நேரமாக இங்கே

உட்கார்ந்திருக்கிறேன். ஒருக்கால் உங்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்று

வருந்துகிறேன். போய் விடுகிறேன்என்று கூறிற்று.


ஆனால் அந்த எருது அப்படியோன்றுமே இல்லை. உங்கள் குடும்ப சகிதமாக வந்து என் கொம்பின் மேல் தங்கிப் போங்களேன். நீங்கள் எனை ன்செய்து விட முடியும் ? என்று பதிலளித்தது.



துன்பம் வரும் போது அதனிடம் நாமும் ஏன் அவ்வாறு கூறக் கூடாது??????

Monday, October 25, 2010

துணையெழுத்து

புத்தக நேசிகளின் நட்பு எனக்கு பரிச்சயமான ஒன்று. என் படுக்கை அறையில் என்னோடு உறங்கும் அளவு நெருக்கம் கொண்ட ஒரே தோழன் புத்தகங்கள் மட்டுமே. நேசித்ததலோ என்னவோ தோழிகளின் பரிசளிப்பில் புத்தகங்களின் வருகை குறைவு. (அது வீணான செலவு என்று எண்ணுவோர் பலர்.) புத்தகப் பரிசு என் வாழ்வில் நான் ருசிக்காத கனி. நானே யார்க்கும் இது வரை புத்தகங்கள் பரிசளிததில்லை. காரணமறியேன். அவற்றை பொக்கிஷங்களாய் மட்டுமேயன்றி பரிசு பொருளாய் அளிக்க எனக்கு மனமில்லை(அது தவறென உணர வைத்தது புது நட்பு).

முதன் முதலாய் பரிசுபொருளாய் என் புத்தகவரவில் முதலிடம் கண்டது துணையெழுத்து. அவ்வகையில் இத்துணையெழுத்து என் இனிய நினைவுகளின் பக்கங்களில்முதலெழுத்து.

ஜெயகாந்தன், ரமணிச்சந்திரன், சுஜாதா என்று நான் நேசித்த எழுத்தாளர் வட்டத்துக்குள் s.ராமகிருஷ்ணன் என்ற தொடர்புள்ளி இணைந்திருப்பது இனிமை. விருப்பங்கள் கலையும் போது மிஞ்சுவதெல்லாம் அவமதிப்பு தான் என்ற முதல் வாசகதிலிருந்து இறுதி பக்க புகைப்பட புன்னகை வரை எழுத்தாளரின் தனித்துவம்.

சைதாபேட்டை கழுதையிலிருந்து ஜிம் கார்பெட்டின் நைனிடால் ஏரி வரை நம் தடம் பதித்த உணர்வு படித்து முடிக்கும் போது. இயல்பான வாழ்கை அனுபவங்களை அதீத வாழ்வியல் தத்துவத்தோடு அதன் சுவை குறையாமல் அளித்திருப்பது எழுத்தாளரின் சிறப்பு.

இழந்த நட்பு, தவறிய வாய்ப்பு, மறந்து போன உறவுகள், யோசிக்க மறந்த பிழைகள், சந்தித்த உறவுகள், அனுபவிக்க தவறிய இனிமைகள் இவ்வனைத்து உணர்வுகளின் ஒரு நித்ய தொகுப்பு.

இதுநாள் வரை வாங்கிய பொருளின் மதிப்பு இரட்டிபாகிபோனது தங்கத்தில் மட்டுமே உணர்ந்திருக்கிறேன். படித்து முடிக்கும் போது பன்மடங்காய் உணர்ந்தேன். துணையெழுத்தையும் + பரிசளித்தவரின் நட்பையும்.

Thursday, October 21, 2010

தனிமை



துயர சுவர்களில்
முட்டி மோதும் மீனாய் நான் .........
வெறுமை கடலில் மூழ்கும் முன்
மீட்டு செல்ல வந்து விடு...............

books..............




நீ தந்த பரிசுப் பொருளை
தினம் நூறு முறை
முத்திரையிடுகிறேன்
என் முத்தங்களால்............

என்னவன்.......


என் பெண்மைக்கும்
மென்மைக்கும்
பொருள் சொன்னவன் நீ................

Wednesday, October 20, 2010

Love, live and let live!!!!!



Love is not about "It's your fault", but "I'm sorry"

Not “where are you” but "I'm right here for you"

Not “how could you” but "I understand"

Not “I wish you were” but "I'm thankful you are"

Tuesday, October 19, 2010

கடிதம்


கண்ணே நலமா????????


உன் இரு விழிகளின்
கருவிழியாகிய நான்
என் இதயத்திற்கு (உனக்கு) எழுதும்
ஓர் ஆசை மடல்........



நீ நலம் என்ற நம்பிக்கையிலேயே
துடித்து கொண்டிருகிறது
என் இதயம்


உன் சுவாசம் தடை பட கூடாதென்றே
இருமடங்கு துடித்து கொண்டிருக்கும்
இதயத்தோடு நான்.........




பின் உன் நலத்துக்கென குறை?????????????
ஆக்சிஜென் குறைந்தாலும்
என் ஆவியில் உயிர்பிப்பேன் உன்னை !!!!



விரல் தொடும் வேளையில்
உயிர் விடும்
காம காதல் அல்ல நம்முடையது..........

இடைவெளி நீண்ட போதும்
இடைவிடாமல் உனை எண்ணும்
என் இதயத்தின் உயிர்காதல்.....


கடிதத்துகாய் வார்த்தை தேடி
ஓடும் வெறும் ஹார்மோன் வேலை அல்ல
நம் நேசம்

அது
உணர்வுகள் கடந்து
உருவங்கள் மறந்து
இரு உள்ளங்கள் மட்டுமே வாழும்
காதல் தேசம்
.

என் நலம் நீ கேட்பாய்
என்றறிவேன் .................

என் இறையாய் நீ வாழும்
இவ்வுடல் என் ஆலயம்
அதில் பழுதொன்றும் இல்லை.

விழுதாய் நீ என்னில்
படர்ந்திருப்பதால் ..............


அப்புறம்
இயல்பு கடிதம் தான்...........

சாப்பிடு (என் நினைவுகளை)
நன்றாய் உறங்கு (என் கனவுகளோடு)
நன்கு படி (நம் காதல் சரித்திரத்தை)
உடம்பை பார்த்து கொள்(உள்ளிருக்கும் என் இதயத்தையும்)


இறுதியாக
என் ஆயுள் வரை நான் சுமக்கும் கரு நீயடா!

ஆனால்
என் மரணம் கூட
உன்னை பிரசவிக்காது

எரிந்த பின்பும்
சாம்பலாய் நின்று
நம் காதலின் சாட்சி சொல்லும்!!!


என்றும் உன் நினைவுகளில்
வாழும் (வாடும்)
சரண்யா...............

கலப்படம்........உன்னில் நான்.........



கள்வனே!
உன் நினைவுகள் உள்ளத்தில் பதிந்தவை அல்ல
உயிரிலே கலந்தவை !!!!!!

காத்திருக்கிறேன் கல்லறையில்...............


மரணக் கடலில் மூழ்கும் தருணத்திலும்
கடைசி முறையாக கண்கள் தேடுகின்றன
உன் வருகையை...................

நீ வேணும்.................


நீ இல்லாத சொர்க்கம் கூட
எனது கல்லறை ஆக்கப்படும்.........

ஆயுள் தண்டனை.


உன் இதய சிறையில் ஆயுள் தண்டனை.....
அறிவித்து விடு விரைவில்......
தீர்ப்பிடும் நாளுக்காய் மட்டுமே
துடித்து கொண்டிருகிறது என் இதயம்...........

லப்.............டப்........



உனக்கும் சேர்த்து
இரு மடங்காய் துடித்து கொண்டிருக்கிறது
என் இதயம்