Total Pageviews

Monday, June 18, 2012

kolams here..........




நான் விருப்பபட்டு செய்யும் விஷயங்களில் ஒன்று  கோலமிடுதல் ..........




என் ஒவ்வொரு நாள் சாதனைகளுக்கும் நான் இடும் பிள்ளையார் சுழி




கதிரவனின் நெற்றியில் முத்தமிட்டு காலை வணக்கத்தோடு நான் கொடுக்கும் தேநீர்.......





என் முழு மன நிறைவிற்காய், வாசலில் நான் எழுதும் ரங்கோலி கவிதை..............




உள்ளத்தின் தெளிவு கோலத்தில் தெரிவதாய் ஒரு பெருமிதம் எனக்கு...;





முழுதாய் வடிவித்து எழுகையில் புதிதாய் பிரசவித்த மழலையின் புன்சிரிப்பை என் படைப்பில் காண்பது போல் ஓர் உணர்வு........



வாழ்வின் நிறைவை, ருசியை சிறு சிறு விஷயங்கள் தான் அனுபவிக்க வைக்கின்றன...........




காலை நேர தென்றலோடு கை கோர்த்து தினம் நான் எழுதும் காவியம்..............


       
தமிழ் பாரம்பரியத்தை பரிமாறி கொள்வோம்
வாசலிலும், வாழ்க்கை முறையிலும்................
இனிய காலை வணக்கங்கள் ..........

No comments:

Post a Comment